Friday, June 5, 2020
Sunday, November 25, 2018
Wednesday, November 21, 2018
இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா ! - -குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன்
இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா !
-குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன்
https://www.youtube.com/watch?v=3ZgKCZA22_4&t=18s
குமரிக்கண்டம் உன் பூர்வீகமல்லவா
அது மூழ்கி இருப்பது போல்
நீயும் இருப்பதா?
உலகமே வியக்கும் உந்தன் படைப்படா
நீ கற்றுத்தராதது இவ்வுலகில் ஏதடா
சங்க இலக்கியமே அதற்கு சாட்சித்தானடா!
பகுத்தறியும் அறிவை ஊட்டினாய்
எங்கள் நிலத்தலைவனையே இறைவனாக்கினாய்
போரில் வீரம் நிறைந்த வீரனையே நடுகல்லாக்கினாய் !
இன்று அறிவியல் கண்ட புதுமையை நீ
அன்றே பாடலாக்கினாய்
புறநானூற்றையே இன்றைய ஆராய்ச்சியின் தொடக்கமாக்கினாய் !
சமயம் கடந்து நீ பல கோவிலாக்கினாய்
ஒரு விரல் நீளத்தில் கூட நீ, பல சிற்பம் செதுக்கினாய்
விண்ணை முட்டும் தஞ்சை பெரிய கோவிலை கற்களால் எழுப்பி
எங்களை வியப்பில் ஆய்தினாய் !
பிறந்தவுடன் பேசும் ஒவ்வொருவரின் மொழியும் அவரின் தாய்மொழியாம்
உலகமே பேசும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியே
நம் தமிழ்மொழியே !
-குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன்
இதுவே ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தும் பாடமாம் !
சிந்துச்சமவெளியும், கீழடி நாகரீகமும் நமக்குச் சொன்னது
இவ்வுலகில் தோன்றிய மூத்த குடிகள் நாமே என்றானது
எனவே இவ்வுலக நாடுகள் தோண்ட மறுக்குது பயத்தில் நடுங்குது !
உன் பாடல் வரிகளில் கற்பனை மிளிருது, வாழ்வை வகுக்குது,
காதல் இருக்குது, காமம் தெரியுது போதிக்குது
வீரமும் துறவும் அதிலே தெரியுது
இருந்தும் என்ன?
உன்னில் இருந்து பிரிந்த மொழிகள் உன் நாவில் ஆடியே
உன்னையே ஆள்வதா
உயிர் மெய், ஆய்தம் என இலக்கணம் வகுத்த தமிழை
நீயே மறந்து போவதா !
நீ இத்தரணியை ஆண்ட தவப்புதல்வனாட
உன் தோல்வியே
உன்னுடன் இருந்து உன்னையே வீழ்த்தி
நீயே அறியாமல் அடிமையாய் ஆழ்த்தி
உன்னையே ஆகும் அரசியல் சூழ்ச்சி
இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா !
இன்னும் எழவில்லையா?
சேரசோழ பாண்டியனின் கொடிகளை எடுத்து
பறைஇசை அடித்து
பாதிதாசனின் பாடல்களை தெருவெங்கும் கடத்து
உறக்கம் கலைந்து எழுந்து வருவான் !
அவனின் வீரம் அவனே அறிவான் !
இன்னுமா உறக்கம் எழுந்து வா தமிழா !
எழுத்து
-குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன்
Kumarikkanda Thamizhmaanavan Neppoliyan R
கஜா புயலின் பாதிப்பிற்க்காக கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி
கஜா புயலின் பாதிப்பிற்க்காக கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி..
"புயலே புயலே" என்செய நினைத்தாய் தமிழச் சாதியை என்று புலம்புவதில் இனிப் புண்ணியமில்லை. வாழ்விழந்த தமிழர்கள் மீட்கப்படவும் காக்கப்படவும் வேண்டும். அவர்களின் தலைக்கு மேலே வானம் கிழிந்துபோனது; கால்களுக்குக் கீழே பூமி அழிந்துபோனது.
‘கஜா’ புயலால் விழுந்துபோன தென்னை மரங்கள், வீட்டில் விழுந்த இழவுகளாகிவிட்டன. மனிதன் சாவதைவிட மாடு சாவதுதான் ஒரு விவசாயக் குடும்பத்தின் பெருந்துயரம். தமிழ்நாட்டுக்கே சோறு போடும் நிலம், தனக்குச் சோறில்லாமல் போவது அவலத்தின் அவலம்.
குழந்தைகளும் முதியவர்களும் தொழுதும் அழுதும் நிற்கும் துயரம், பதறும் இதயத்தைச் சிதறுதேங்காய் போட்டுவிட்டுப் போகிறது. என்னால் தொலைக்காட்சி பார்க்க முடியவில்லை. அதை நிறுத்தி விடுகிறேன் அல்லது கண்களை அணைத்து விடுகிறேன்.
வேதாரண்யத்தில் இருந்து இலங்கை நெடுந்தூரமில்லை; பக்கம்தான். போரால் இலங்கைத் தமிழன் அன்று அடைந்த துயரத்தை, இந்தியத் தமிழன் இன்று புயலால் அடைந்திருக்கிறான். ஒரு தமிழனாக அல்ல, மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது.
அரசியல் – சாதி – மதம் என்ற எல்லா எல்லைகளையும் கடந்து தமிழர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இயற்கையைவிட மனிதன் சிறந்தவன். கொடுப்பதும் கெடுப்பதும் இயற்கையின் குணங்கள். ஆனால், கொடுப்பது மட்டும்தான் உயர்ந்த மனிதனின் சிறந்த குணம்.
அள்ளிக் கொடுப்போர் அள்ளிக் கொடுங்கள்; கிள்ளிக் கொடுப்போர் கிள்ளிக் கொடுங்கள். ஒரு செல்வந்தரின் அல்லது ஒரு நிறுவனத்தின் இரும்புப் பெட்டியில் உள்ளதெல்லாம் தமிழன் கொடுத்த பணம்தான். இயன்றதைக் கொடுங்கள்.
வரி கட்டுகிறோம்... இல்லையென்று சொல்லவில்லை. அது ஆணைக்கு உட்பட்டுச் செய்வது. தர்மம், அறத்துக்கு உட்பட்டுச் செய்வது. உறைவிடம் – உணவு – உடை – அன்பு – ஆறுதல் – மீட்சி... இவையே அவர்களின் இன்றைய முன்னுரிமைகள். ஊர்கூடி ஊரை மீட்டெடுப்போம்.
அரசு அதிகாரிகள் நேர்மையோடும் அக்கறையோடும் ஈரத்தோடும் ஈகையோடும் செயலாற்றுவார்கள் என்று நம்புகிறோம். அரசு ஆற்றும் நற்பணிகளுக்குப் பாராட்டு; நன்கொடை தந்தோர்க்கு நன்றி.
என்ன இருந்தாலும் சொல் என்பது பித்தளை; செயல் என்பதே தங்கம். எழுதிப் பிழைக்கும் இந்த எளிய கவிஞன், தமிழர் மறுசீரமைப்புக்காக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவழி அனுப்பியிருக்கிறேன். இந்தச் சிறுதொகை, ஐந்து ஜோடிக் கண்களின் கண்ணீரைத் துடைத்தால் அதுபோதும் எனக்கு.
எளிதில் அடைய முடியாத கிராமங்களில் மீட்சிப் பணியாற்ற வெற்றித்தமிழர் பேரவைத் தோழர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் விரைவில் களமிறங்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
-தொகுப்பு: குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன்
(Kumarikkanda Thamizhmaanavan Neppoliyan.R)
Tuesday, March 27, 2018
Wednesday, March 21, 2018
பாரதிதாசன் படி படி நூலைப்படி
படி |
எடுப்பு : நூலைப்படி -- சங்கத்தமிழ் நூலைப்படி -- முறைப்படி நூலைப்படி உடனெடுப்பு : காலையிற்படி கடும்பகல்படி மாலை, இரவு பொருள்படும் படி நூலைப்படி அடிகள் : கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் அப்படிக் கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப் படி அப்படியே இன்பம் படி இறந்ததமிழ்நான் மறை பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள் படி அதன்படி புறப்பொருள் படி நல்லபடி புகப் புகப் படிப்படியாய்ப் புலமை வரும் என்சொற்படி நூலைப்படி! சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி சேதி அப்படி தெரிந்துபடி தீமை வந்திடுமேமறுபடி நூலைப்படி பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி வையகம் ஏமாறும்படி வைத்துள்ளநூற்களை ஒப்புவதெப்படி நூலைப்படி! தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படி அடங்காஇன் பம்மறுபடி ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி நூலைப்படி! |
- புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
- தொகுப்பு:
குமரிக்கண்ட தமிழ்மாணவன் இர.நெப்போலியன்
Subscribe to:
Posts (Atom)